Nalla Soaru

திணை

திணை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் 2வது தானிய வகையாகும் . பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். தினை என்றவுடன் தமிழ் கடவுள் முருகப் பெருமான் வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் படித்த கதைகள் நம் நினைவுக்கு வரும். இதிலிருந்து, புராண காலம் தொட்டே தினையை பயன்படுத்தி வந்தது நமக்கு புரியும்.

ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 12.3கி ,
கொழுப்பு சத்து : 4.3கி,
தாது உப்புகள்:3.3கி ,
நார்ச்சத்து : 8கி ,
மாவுச்சத்து:60.9கி ,
கால்சியம் :31மிகி ,
பாஸ்பரஸ் :290 மிகி ,
இரும்புச்சத்து: 2.8 மிகி

மருத்துவ பயன்கள்:
1. இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.

சமைக்கப்படும் உணவுகள் :
1. திணை மாவு 2. திணை முறுக்கு 3.திணை அல்வா 4. திணை புட்டு 5.திணை பொங்கல் 6. திணை லட்டு