நல்ல சோறு அமைப்பு :

இது வரும் தலை முறை ஆரோக்கியமான தலைமுறையாக வாழ ஏற்படுத்தப்பட்ட அமைப்பு . தூரித உலகில் அனைத்தும் தூரிதமாக நடக்க, தூரித உணவுகள் உண்டு, தூரிதமாக இவ்வுலகை விட்டு விலகும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நலனை கருத்தில் கொண்டு , அவர்களை அதிலிருந்து மீட்டு எடுக்க ஏற்படுத்தப்பட்டது.உலக மயமாக்கல் வழியாக உள்ளே நுழைந்த அயல் நாட்டு உணவுகளின் தீங்கினை வலியுறுத்தி , நமது பாரம்பரிய உணவுகளின் அருமையை எடுத்துரைத்து , ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் மீண்டும் பாரம்பரிய , இயற்கை உணவுகளை கொண்டு சேர்த்து , அதன் மூலம் மக்கள் நலம், மண் வளம் மற்றும் விவசாய நலன் பாதுகாப்பதே இவ்வமைப்பின் அடிப்படை நோக்கமாகும்.
பசுமை புரட்சியின் விளைவாக கடந்த 50 ஆண்டுகளாக இரசாயன உரமேட்டற்பட்ட அரிசியையும் , கோதுமையையும், காய்கறிகளையும் மட்டுமே அறிமுகமான இன்றைய தலை முறையினர் , அதன் விளைவாக பெருவியாதிகளில் சிக்கி உள்ளனர் . இன்றைய குழந்தைகள் அதற்கும் ஒரு படி மேலே போய் , அரிசி உணவையும் மறந்து பீட்சா , பர்கர் என உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்து வருகின்றனர். இதன் விளைவாக ஹார்மோன் பிரச்சனை , மிக சிறிய வயதிலேயே பூப்படைதல் , சர்க்கரை வியாதி , இரத்த அழுத்தம் மற்றும் புற்று நோய்க்கு ஆட்கொண்டுள்ளனர். இவை மட்டுமின்றி குலைந்தி உருவாவதற்கே தற்போது அதிக செயற்கை கரு தரிப்பு மையங்கள் பெருகி உள்ளன . வளர்ந்து வரும் சம்ன்படுத்தபடாத பொருளாதார வளர்ச்சி , ஒரு சிலருக்கான லாப நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் உடல் நலத்தில் அக்கறை இல்லாமல் அவர்களை அழிவு பாதைக்கு தள்ளி கொண்டு இருப்பது மட்டுமல்லாமல் நம் பாரம்பரியத்தையும் , கலாசாரத்தையும் சீரழிக்கின்றன.
இத்தகைய சூழ் நிலையில் , மக்களுக்கு நம் பாரம்பரிய உணவுகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி , அவ்வுணவுகளை சுவையாக குடும்பத்தினருக்கு குறிப்பாக குழைந்தைகளுக்கு தயாரிப்பது பற்றி எடுத்துரைப்பது இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாகும்.நாம் தொடர்ந்து பயிர் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் , இரசாயன உரங்களையும் , பூச்சி கொல்லியையும் இட்டு மண்ணில் உள்ள நுண் உயிர்களையும் , பயிர்களுக்கு நல்லது செய்யும் பூச்சிகளையும் கொன்று மண்ணை மலடாக்கி மிக பெரிய சூழ்நிலை சீர்கேட்டை உருவாக்கி உள்ளோம் . ஆனால் சிறுதானியமானது குறைந்த நீர் தேவையிலேயே நம் பாரம்பரிய விவசாய முறையிலேயே நன்றாக வளரக்கூடியது.இவ்வாறு சிறுதானிய உற்பத்தியை மற்றும் தேவையை பெருக்கவதன் மூலம் மண்வளம், மக்கள் நலம் பாதுகாக்கபடுகிறது . இது வரை இரசாயன உரங்களையும் , மரபணு மாற்று விதைகளை மட்டுமே நம்பி அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கிற விவசாயிகளுக்கு இது ஒரு நம்பிக்கையான மாற்று விவசாயம். விவசாயிகளுக்கிடையே இவ்விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது இவ்வமைப்பின் மற்றுமொரு முக்கிய நோக்கமாகும்.