இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்தியாவில் விளையும் உணவு தானியத்தில் 25 சதவீதம் ராகி விளைகிறது. அரிசி மற்றும் கோதுமையைவிட ஊட்டச்சத்து நிறைந்தது ஆகும்.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 7.3கி ,
கொழுப்பு சத்து : 1.3க,ி
தாது உப்புகள்:2.7கி ,
நார்ச்சத்து : 3.6கி ,
மாவுச்சத்து:72கி ,
கால்சியம் :344மிகி ,
பாஸ்பரஸ் :283 மிகி ,
இரும்புச்சத்து: 3.9 மிகி
மருத்துவ பயன்கள்:
ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
• கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
• தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
• லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது.
• இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
• உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
• குடலுக்கு வலிமை அளிக்கும்.
• உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
சமைக்கப்படும் உணவுகள் :
ராகி களி , ராகி மால்ட் , ராகி தோசை , ராகி ரொட்டி